தமிழ்நாடு

தமிழர்களை சீண்டிப்பார்க்கும் அரசு: தமிழக அரசுப் பள்ளிகளில் இந்தி திணிப்பு!

Published

on

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் கணினிகளிலிருந்து தமிழ் மொழியிலுள்ள அறிவிப்புகள் மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு இந்தி மொழியை திணித்துள்ளனர். இது தமிழர்களை சீண்டும் விதமாகவே உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் இதனை பதிவு செய்வார்கள். பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும் போதும் ஆசிரியர்கள் கைரேகையையும் பதிவு செய்வார்கள்.

அப்போது கணினியின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாட்டுக் கட்டளைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திரையில் தோன்றும். ஆனால் கடந்த திங்கள் முதல் கணினித் திரையில் தோன்றும் அறிவிப்புகளில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தமிழை நீக்கிவீட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் தான் இதுவரை இந்தி திணிப்பை செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் தற்போது தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி சேர்க்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர்களை சீண்டும் விதமாகவே உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version