இந்தியா

தேசிய கொடியை போர்த்தி கொண்டு இந்தியாவை சூறையாடும் அதானி: ஹிண்டர்பர்க் பதிலடி!

Published

on

ஹிண்டர்பர்க் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பயங்கர வீழ்ச்சி அடைந்தன என்பதும் பல கோடி மதிப்புள்ள அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஹிண்டர்பர்க் அறிக்கை குறித்து 413 பக்க விளக்க அறிக்கையை அதானி கொடுத்தது என்பதும் பார்த்தோம். இந்த நிலையில் தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியை சூறையாடி வருவதாக ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து ஹிண்டர்பர்க் நிறுவனம் கூறி இருப்பதாவது:

இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் ஒரு அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் தடுக்கப்படுவதாகவும் நாங்கள் நம்புகிறோம், இது தேசத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அதே வேளையில் இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்திக்கொண்டது போல் இருக்கின்றது.

அதானி குழுமத்தின் 413 பக்க பதிலில், எங்கள் அறிக்கை தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட சுமார் 30 பக்கங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பக்கங்களில் பொருத்தமற்ற கார்ப்பரேட் விவரங்கள் மட்டுமே உள்ளன. அதானி குழுமத்திடம் எங்களது ஆய்வுக் குழு கேட்ட 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் இல்லை.

seithichurul

Trending

Exit mobile version