கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பையை மிஸ் செய்த தமிழ்நாடு அணி: இறுதிப்போட்டியில் டுவிஸ்ட்!

Published

on

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் தமிழக அணி 314 ரன்கள் அடித்தும், திடீரென ஏற்பட்ட திருப்பம் காரணமாக தமிழக அணி நூலிழையில் விஜய் ஹசாரே கோப்பையை மிஸ் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே இறுதிபோட்டியில் தமிழகம் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியின் 314 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடதக்கது. தினேஷ் கார்த்திக் மிக அபாரமாக விளையாடி 116 ரன்கள் அடித்தார் என்பதும் பாபு இந்திரஜித் 80 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 315 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹிமாச்சல பிரதேசம் தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுபம் அரோரோ மிக அபாரமாக விளையாடி 136 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இமாச்சல் பிரதேச அணி 47.3 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வி.ஜே.டி முறையில் 47.3 ஓவர்களில் இமாச்சல் பிரதேச அணி 289 ரன்கள் எடுத்திருந்தாலே வெற்றி என கணக்கிடப்பட்டதை அடுத்து விஜய் ஹசாரே கோப்பையை இமாச்சலப்பிரதேசம் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த இமாசலப் பிரதேச அணி விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றி இருப்பதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version