இந்தியா

வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சத்தீஷ்கருக்கு கடத்தும் காங்கிரஸ்? இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பு

Published

on

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாஜக தொண்டர்கள் குஜராத்தில் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழை பெற்றவுடன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு ஆட்சியமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை என்பதாலும், முன்னணியில் உள்ள 3 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதாலும், காங்கிரஸ் வேட்பாளர்களை பேரம் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனடியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் தேதி அன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version