இந்தியா

இந்தியாவில் 100% கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாநிலம்.. பிரதமர் மோடி வாழ்த்து!

Published

on

இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர்.

இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு பங்கு மக்கள் இரண்டாம் டொஸ் கொரோனா தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இமாச்சல் பிரதேசம் சாம்பியனாகியுள்ளது.

அண்மையில் இந்தியா ஒரே நாளில் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் போட்டு சாதனை படைத்தது. சிக்கிம், தாதர், நாகர் ஹாவேலி உள்ளிட்ட இடங்களிலும் கிட்டத்தட்ட முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர். பிற மாநிலங்களும் வேகமாகப் போட்டு வருகின்றன. நாம் இப்போது தடுப்பூசியை முழுவதுமாக போட்டு முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மலைப் பிரதேசமாக இருந்தாலும் முதல் டோஸ் தடுப்பூசியை மக்கள் முழுவதுமாக போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை மக்கள் நம்பாதது மகிழ்ச்சியாக உள்ளது.

வேகமாக இங்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அது சுற்றுலாவுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும். அண்மையில் டிரோன் தொழில்நுட்பத்தில் செய்துள்ள மாற்றங்கள் இமாச்சல் பிரதேசத்துக்குப் பயன் அளிக்கும். புதிய விதிகள் எளிமையானது அல்ல. மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் இதைப் பயன்படுத்தி மக்கள் புதிய வாய்ப்புகளை முன்னெடுக்க வேண்டும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2021, நவம்பர் 30-ம் தேதிக்குள் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த மக்களும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version