இந்தியா

ஹிஜாப் அணிந்ததால் பிளஸ் 2 தேர்வு எழுதாமல் வெளியேற்றப்பட்ட மாணவி!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இதனை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பள்ளி கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுத வந்த சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் தேர்வு அனுமதிக்கப்படவில்லை .

இதனால் ஒரு சில மாணவிகள் தேர்வு எழுதாமல் திரும்பியதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வை விட ஹிஜாப் தான் முக்கியம் என்று மாணவிகள் தேர்வு எழுதாமல் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version