இந்தியா

பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது.. கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!

Published

on

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரி ஒன்றில், அண்மையில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் போனது சர்ச்சையானது.

அதை தொடர்ந்து கர்நாடகா மாநில கல்வித் துறை, “மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வரும் போது ஹிஜாப் அணியக் கூடாது என உத்தரவிட்டது. தொடர்ந்து கர்நாடகாவில் ஒரு பள்ளியில் மாணவிகளை ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் எங்களையும் காவித் துண்டு அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர்.

இப்படி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது சர்ச்சையாகி வந்த நிலையில், வியாழக்கிழமை குல்பர்கா மாவட்டத்தில் பள்ளி ஒன்றிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்கவில்லை.

அது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகளின் பெற்றோர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்களை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கண்ணீர் மல்க வீடு திரும்பினர்.

Trending

Exit mobile version