இந்தியா

ஹிஜாப் வழக்கை இன்று விசாரிக்கும் 3 நீதிபதிகள் அமர்வு: தீர்ப்பு என்னவாக இருக்கும்?

Published

on

ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் மத்தியில் விசாரணை செய்யப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பள்ளி கல்லூரிகளில் உள்ள சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் அணிவது குறித்த விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளது.

இன்றைய விசாரணையில் மாணவிகள் தரப்பு வழக்கறிஞர், அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்கள் என்றும் அதன் பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இது குறித்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை அறிய மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version