தமிழ்நாடு

மீண்டும் ஈவெரா பெரியார் சாலை என பெயர் மாற்றம்: இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!

Published

on

கடந்த பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்த சாலை சமீபத்தில் திடீரென வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டது. அதுகுறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழக நெடுஞ்சாலைத்துறை இணையதளத்திலும் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தங்களது கண்டனங்களை திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். உடனடியாக மீண்டும் பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படாவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் டிரங்க் ரோடு என்று அழைக்கப்பட்ட சாலைக்கு மீண்டும் ஈவேரா பெரியார் சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த பெயர் பலகையில் மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பெயர்ப்பலகைகளில் பெரியார் சாலை என்ற வாசகம் மாற்றப்பட்டுள்ளதை பார்த்து பெரியாரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே வெஸ்டர்ன் டிரங்க் சாலை என்ற பெயரில் கருப்பு மை பூசிய அழிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து ஈவேரா பெரியார் சாலை என்ற ஸ்டிக்கரை ஒட்டி விட்டுச் சென்றனர். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

Trending

Exit mobile version