இந்தியா

வித்தியாசமான ஊரடங்கு 4.0.. மோடி சூசகம்.. பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள்!

Published

on

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநில முதல்வர்களுடனான ஆலோசனை திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நாட்டு மக்களிடையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி வித்தியாசமான ஊரடங்கு, சிறப்பு பொருளாதார நிவாரண நிதி 20 லட்சம் கோடி ரூபாய் போன்றவற்றை அறிவித்தார்.

பிரதமர் மோடியின் இன்றைய உரையின் சிறப்பம்சங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) பொருளாதாரத்தை மீட்க ஆர்பிஐ அறிவித்த சலுகைகளுடன் சேர்த்துச் சிறப்புப் பொருளாதார நிதியாக 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

2) நான்காவது ஊரடங்கு அல்லது முடக்கமானது மே 18-ம் தேதி முதல், புதிய விதிமுறைகளுடன் வித்தியாசமானதாக அமலுக்கு வரும்.

3) அதை சுய சார்பு பிரச்சார பேக்கேஜ் என்று மோடி குறிப்பிட்டார்.

4) நாளை தொடங்கி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சிறப்பு பொருளாதார அறிவிப்புகளை வெளியிடுவார்.

5) 20 லட்சம் கொடி ரூபாய் நிதி என்பது நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியிலிருந்து 10 சதவீதமாகும்.

6) சிறப்பு பொருளாதார பேக்கேஜில் தொழிலாளர் நலன், பணப்புழக்கம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

7) கொரோனா வைரஸ் முன்பு இருந்த சுகாதார கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது.

8) உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க மக்கள் முன்வர வேண்டும்.

9) பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, புள்ளிவிவரங்கள், தேவை உள்ளிட்ட 5 தூண்களின் தன்னம்பிக்கை மெருகேற்றப்படும்.

10) இந்தியா மேக் இன் இந்தியா திட்டம் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

11) கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட நாட்கள் பயணிக்கும் என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே நாம் அனைவரும் சமுக இடைவெளியுடன் மாஸ் அணிந்து கொரோனா வரமால் நம்மை தற்காத்துக்கொள்வோம்.

seithichurul

Trending

Exit mobile version