தமிழ்நாடு

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டின் மிக அதிக பாதிப்பு: ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மும்பையில் மட்டும் 3775 பேருக்கு பாதிப்பு என்றும் புனேவில் 3 ஆயிரம் பேருக்கும் நாக்பூரில் 2700 இருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அம்மாநிலத்தில் 99 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 399 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version