தமிழ்நாடு

அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளவர்கள் யார் யார்?

Published

on

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் சற்று முன் வரை மொத்தம் 30 ஆயிரத்து 169 வாக்குகள் பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சம்பத்குமார் 10 ஆயிரத்து 266 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளதால் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகுதியில் மொத்தம் 28 பேர் போட்டியிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரை தவிர மீதி உள்ள 26 பேர் டெபாசிட் இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பவர்களில் ஒருவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 21 ஆயிரத்து 654 வாக்குகள் இதுவரை பெற்று முன்னிலையில் உள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் 4 ஆயிரத்து 835 பாகங்கள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன், பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

 

 

Trending

Exit mobile version