தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Published

on

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக இளைஞரணி தலைவர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை எழுப்பி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதலில் கருணாநிதியின் வீட்டில் பரப்புரையத் தொடங்கிய அவர், திருச்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சட்டமன்ற துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனும் உள்ளார் என்றும் இதை பகிரங்கமாக சொல்லுகிறேன், முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்றும் சவால் விட்டிருந்தார்.

இதனையடுத்து சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. அதில் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் உதயநிதி ஸ்டாலின் தனக்கு வழங்க வேண்டும் என்றும் இனி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை யாரும் தொடர்புப்படுத்தக்கூடாது என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு, உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending

Exit mobile version