தமிழ்நாடு

தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தலாம்: நீதிமன்றம்

Published

on

தியேட்டர் டிக்கெட் விலை உயர்த்துவதற்கு பரிசீலனை செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு 100% இருக்கை உத்தரவை வாபஸ் பெற்று, 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் செயலை பாராட்டிய நீதிமன்றம், ஏற்கெனவே 100% இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டால் அது அப்படியே இருக்கட்டும் என்றும், அடுத்தடுத்த காட்சியில் 50% இருக்கைக்கு மட்டுமே முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தியது.

மேலும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பரிசீலனை செய்யலாமா என்றும் தமிழக அரசுக்கு கோரி வழக்கை முடித்து  வைத்தது. ஏற்கெனவே தியேட்டர்களில் டிக்கெட் கட்டணமும், பாப் கார்ன், கூல்டிரிங்ஸ் கட்டணமும் கொள்ளை லாபத்தில் இருக்கும் நிலையில், மேலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மிகுந்த சிரமமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version