இந்தியா

பெட்ரோல் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு: இதுதான் காரணம்!

Published

on

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது என்பதும் சென்னையில் 102 ரூபாயை தாண்டி தற்போது பெட்ரோல் விலை விற்ற கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தும் அந்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்காததால் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளின் படி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை அதிகரித்துள்ளதை அடுத்து விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவையும் உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு நாள்தோறும் 20 லட்சம் பேரல்கள் உற்பத்தி என்ற நிலையில் மீட்டமைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நாள்தோறும் நான்கு லட்சம் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வினியோகிக்கும் முக்கிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் குவைத் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கவும் இந்த கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே எண்ணெய் உற்பத்தி விநியோகம் அதிகரிக்கும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு மத்திய, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பையும் குறைந்தால் பெட்ரோல் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version