ஆரோக்கியம்

மாதுளை விதைகளின் மறைந்த ஆரோக்கிய நன்மைகள் – தினம் 4 டீஸ்பூன் போதும்!

Published

on

மாதுளம் பழம் ஆசியாவில் விளையும் மிகவும் ஆரோக்கியமான பழமாகும். இது அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாதுளை விதைகள் சிறிது இனிப்பும், சற்று புளிப்பும் கொண்ட சுவையுடன் கூடியவை. அதேசமயம், பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகின்றன.

காலையில் 4 டீஸ்பூன் மாதுளை விதைகளை எடுத்துக்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எடையை குறைக்க உதவும். மேலும், இதனால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும், நினைவாற்றல் மேம்படும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

மாதுளை விதைகளை வெறும் வயிற்றில் அல்ல, காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும். மாதுளை பழச்சாறும், விதையும் பல ஊட்டச்சத்து பண்புகளை உடலில் சேர்க்கின்றன.

மாதுளையின் ஊட்டச்சத்து பயன்கள்:

ஒரு கப் மாதுளை சாறு 0 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 33 கிராம் கார்போஹைட்ரேட், 533 மில்லிகிராம் பொட்டாசியம், 60 மில்லிகிராம் ஃபோலேட் மற்றும் 22 மில்லிகிராம் சோடியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

அதேபோல், 3/4 கப் மாதுளை விதைகள் 2 கிராம் புரதம், 2 கிராம் கொழுப்பு, 26 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் நார்ச்சத்து, 15 மில்லிகிராம் வைட்டமின் சி மற்றும் 280 மில்லிகிராம் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகின்றன.

மாதுளை விதைகளை தினமும் உங்கள் உணவில் சேர்த்து, உங்கள் உடல் ஆரோக்கியமானதுடன் உற்சாகமாக இருக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version