சினிமா செய்திகள்

சித் ஸ்ரீராம் குரலில் இன்னொரு ஸ்லோ பாய்ஸன் இதோ!

Published

on

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வரும் மே 17ம் தேதி வெளியாகவுள்ள மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீடு வரும் மே 8ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான அந்திமாலை நேரம் என்ற பாடலை அனிருத் தற்போது வெளியிட்டுள்ளார்.

தினேஷ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். எலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மெலோடி பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 96 படத்தின் பாடல்களை எழுதிய கார்த்திக் நேத்தா லிரிக்கில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இனி வரும் திருமண நிகழ்ச்சிகளை இந்த பாடலையும் நிச்சயம் ஒலிபரப்புவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் தேவையில்லை. அந்த அளவுக்கு பாடல் ரம்மியமாக அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version