சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மாஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், 2ம் கட்ட படபிடிப்பு வரும் மே 29ம் தேதி முதல் தொடங்கும் என லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், தர்பார் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னை வந்த சூப்பர்ஸ்டார் கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு பதில் கூற விரும்பவில்லை என்று சொல்லிச் சென்றார். தற்போது சென்னையில் ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version