செய்திகள்

இந்த 8 மாத சிறுமிக்கு இதயத்தில் பிரச்சனை.. கொஞ்சம் உதவுங்கள்!

Published

on

திருவள்ளூர் மாவட்டத்தில், தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சாராவின் உயிரைக் காப்பாற்ற நிதியுதவி தேவைப்படுகிறது.

சாரா 5 மாத குழந்தையாக இருக்கும் போது திடீரென காய்ச்சல், ஜசளி மூக்கடைப்பு வந்து கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது சராவுக்கு பிறவி இதய நோய் (congenital heart disease) இருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில் சாராவை அனுமதிக்க வேண்டும் என்ற மருத்துவர்கள் கூறிவிட்டனர். மியாட் மருத்துவமனையில் சாராவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு விரைவாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சாராவின் அப்பா ஜெரால்ட் ஒரு வேன் டிரைவர். போதுமான வருமானம் இல்லாததால், இவரால் சாராவின் சிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. சாராவுக்கு நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு (Large Shunt and PAH) ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய கட்டாயம் சாராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சாராவின் சிகிச்சைக்கு 2,80,000 ரூபாய் தேவைப்படுகிறது.

இவரது சிகிச்சைக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து உங்களால் முடிந்த வரையில் உதவி செய்யுங்கள். குறைந்தது 5 ரூபாய் முதல் உதவி செய்யலாம். உடனே செய்யுங்கள்!

seithichurul

Trending

Exit mobile version