இந்தியா

நண்பருக்காக 1400 கிமீ தூரம் ஆக்சிஜனை சுமந்து கொண்டு சென்ற ஆசிரியர்: ஆச்சரிய தகவல்!

Published

on

தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதும் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பி உதவி செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நொய்டாவில் இருக்கும் தனது நண்பனின் குடும்பத்தை காப்பாற்ற 1400 கிலோ மீட்டர் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு சென்று உதவியுள்ளார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான இவர் தனது நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினர் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அறிந்ததும் துடிதுடித்து போனார். உடனே ஜார்கண்டில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது நண்பரிடம் கொடுத்து அவரது குடும்பத்தை காப்பாற்றி உள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version