உலகம்

கடைசி நொடியில் தப்பினார்.. ராகுல் காந்தியின் ம.பி ஊர்வலத்தில் வெடித்த ஹீலியம் குண்டு!

Published

on

போபால்: மத்திய பிரதேசத்தில் பேரணி நடத்திய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்திற்கு அருகே ஹீலியம் பலூன் ஒன்று பெரிய அளவில் வெடித்து இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி நடத்திய ஊர்வலத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் என்ற பகுதியில் பேரணி நடத்திய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராகுல் காந்தி தன்னுடைய வாகனத்தில் வரும் போது அங்கு அருகில் இருந்த ஹீலியம் பலூன் வெடித்துள்ளது. மிகப்பெரிய சத்தத்துடன் இந்த பலூன் வெடித்து இருக்கிறது.

ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தீபம் பட்டு இந்த பலூன் தீ பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இது வெடித்து சிதறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக இதுதான் காரணமாக என்று விவரம் வெளியாகவில்லை.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version