தமிழ்நாடு

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டில் நள்ளிரவில் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

Published

on

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது வீட்டில் திடீரென நேற்று நள்ளிரவு சோதனை நடந்தது. இந்த சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 சொகுசு கார்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் உள்ள முக்கிய தகவல்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்ற ஹெலிகாப்டர் சகோதர்களின் பணமோசடி விவகாரம். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். சொந்தமாக வைத்துக்கொண்டு அதிலேயே இந்த சகோதரர்கள் வலம் வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்டரி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி இவர்கள் பல லட்ச ரூபாய் பொது மக்களிடமிருந்து வசூல் செய்ததாகவும் இதற்காக ஏஜெண்டுகளுக்கு அதிக அளவில் பணம் கமிஷனாக கொடுத்ததாகவும் தொழிலதிபர்கள் உள்பட பலரும் இவர்களிடம் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கருப்புப்பணம் வைத்து இருந்தவர்கள் தான் இவர்களிடம் முதலீடு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராததால் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சுறுசுறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென காவல்துறையினர் விக்டரி பைனான்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சொகுசு கார்கள் வைப்பதற்காகவே ஒரு தனி வீடு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீட்டில் 12 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த சொகுசு கார்களின் மதிப்பு ரூ.8 கோடி என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version