தமிழ்நாடு

விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட ஹெலிகாப்டர் வீடியோ: இணையத்தில் வைரல்!

Published

on

 இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்த இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் மரத்தில் மோதி சுக்கு நூறாய் உடைந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த பதினான்கு பேர்களில் 13 பேர் பலியாகினர் என்பதும் ஒரே ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கிடைத்து விட்டதாகவும் அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையை ராணுவ அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் முன் ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எடுத்த இந்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/rajivojha9/status/1468810509294047232

Trending

Exit mobile version