தமிழ்நாடு

மீட்புப்பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு ஒரு ஆண்டு நன்றிக்கடன்: ஜெனரல் அறிவிப்பு!

Published

on

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணியில் உதவிய கிராம மக்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் நன்றிக்கடன் செலுத்தப்படும் என ஜெனரல் வருண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து நிகழ்ந்தபோது மீட்பு குழுவினர்களுக்கு அந்த பகுதி மக்கள் பெரும் உதவி செய்தனர் என்பதும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி என்று கூறிய ஜெனரல் வருண், உதவி செய்த நஞ்சப்ப சத்திரம் மக்களின் உதவிக்குக் கைமாறாக ஒரு ஆண்டு முழு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் செவிலியர் மூலம் கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஜெனரல் அருண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்ப உதவிய நீங்கள் தான் கடவுள் என்றும் நீங்கள் செய்த உதவி விலைமதிப்பற்றது என்றும் அதற்கு ஈடாக எதையும் தரமுடியாது என்றும் மீட்பு பணியில் உதவிய கிராம மக்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் அருண் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் நன்றி என்றும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version