சினிமா

எமலோகத்திலும் வாரிசு சண்டையா?

Published

on

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதில், எமதர்ம ராஜா இடத்திற்கு அடுத்த வாரிசாக யோகிபாபு வர போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமலை வைத்து கன்னிராசி படத்தை இயக்கிய இயக்குநர் முத்துகுமரன், அந்த படத்தின் ரிலீசுக்கு முன்னரே யோகிபாபுவை நாயகனாக வைத்து படம் எடுக்க ஆரம்பித்து விட்டார். தர்மபிரபு என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு, நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனாக யோகிபாபு வாரிசு அடிப்படையில் போட்டியிடுகிறார். சித்ரகுப்தனாக பதவி வகித்து வரும் கருணாகரன், பதவி அடிப்படையில் போட்டியிடும் எமலோக காமெடி அரசியல் படமாக தர்மபிரபு உருவாகவுள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கலை இயக்குநர் பாலசந்திரன் தலைமையில் பல கோடி ரூபாய் மதிப்பில் இப்படத்திற்கான எமலோக செட் போடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூர்கா படத்தை தொடர்ந்து தர்மபிரபு படத்திலும் லீடு ரோலில் யோகிபாபு அசத்தவுள்ளார்.

எல்லாமே கோலாமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய யோகம் தான் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Trending

Exit mobile version