உலகம்

நாளை மறுநாள் பைடன் பதவியேற்பு! மாகாணம் முழுவதும் ராணுவம் குவிப்பு!!

Published

on

46 ஆவது அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, பாதுகாப்பு கருதி மாகாணம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்த டிரம்ப், வெற்றிச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனது ஆதரவாளர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கலவரத்தை தூண்டினார். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். டிரம்பின் டுவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், நாளை மறுநாள் ஜோபைடனின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவின் போது நாட்டில் வன்முறை வெடிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் வாஷிங்டனில் போலீசார் ராணுவம் குவிக்கப்பட்டனர்.

இப்படி இருந்தும் நேற்று வெள்ளை மாளிகை அருகே ஒரு கார் வந்தது. அதில் வந்தவர்கள் போலி பதவியேற்பு அழைப்பிதலை வைத்திருந்தனர். அந்தக் காரைச் சோதனை செய்ததில் தானியங்கி துப்பாக்கிககள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இதனையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது.

Trending

Exit mobile version