தமிழ்நாடு

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு!

Published

on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 105 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வடகிழக்கு பருவமழை முடிந்தபோதும், காற்று திசைவேக மாறுபாட்டால்மிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

தலைநகரமான சென்னையில் நள்ளிரவில் இருந்தே மழை பெய்து வருகின்றது. குறிப்பாக அண்ணா நகர், கே.கே நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே விடாமல் மழை பெய்தது. எழும்பூரில் தொடர் மழையால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு  உள்ளாகினர். இதே போல் கிண்டி, ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விடாமல் மழை பெய்தது.

மழை காரணமாக இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் மழை பெய்து இருப்பது இதுவே முதன் முறை ஆகும்.

Trending

Exit mobile version