தமிழ்நாடு

இன்று 27 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கனமழை என்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் இன்றும் 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களிலும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version