தமிழ்நாடு

தொடரும் பருவமழை; இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Published

on

தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது பற்றி வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,

தென் மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Trending

Exit mobile version