தமிழ்நாடு

சென்னையில் இன்று மீண்டும் கனமழை: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் இன்று முதல் சனிக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, தி நகர், எம்.ஆர்.சி நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய இரண்டு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இருப்பினும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version