தமிழ்நாடு

குட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

அதேபோல நாளை மறுநாள் தென் தமிழகம் ம்மற்றும வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதேபோல வருகிற 14 மற்றும் 15 ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும், திண்டுக்கல் மாவட்டம் பழநியிலும் அதிகபட்சமாக தலா 5 சென்டி மீட்டர் மழைப் பெய்துள்ளது.

 

Trending

Exit mobile version