தமிழ்நாடு

தமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை: விவசாயிகள் கவலை

Published

on

தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை நேற்று இரவு முதல் செய்து வந்தது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருவதன் காரணமாக கனமழையால் கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்த மழை காரணமாக குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் நல்ல மழைத்துள்ளதால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால். இதன் காரணமாக வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்

ஊட்டியில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ஊட்டி பேருந்து நிலையம், படகு நிலையம் உள்பட பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது

சென்னையில் வளசரவாக்கம், ராமாபுரம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நந்தம்பாக்கம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அங்குள்ள சாலைகளில் மழைநீர் ஓடியது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, தெய்யார், செம்பூர், பொன்னூர், பாதிரி, சளுக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

seithichurul

Trending

Exit mobile version