தமிழ்நாடு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் மழை நிலவரங்கள் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், அந்த மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நீலகிரி, கோவை, கடலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21, 22 ஆகிய இரண்டு நாட்களில் ஒரு சில வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென்மேற்கு தென்கிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பிருக்கிறது என்றும் வரும் 20ம் தேதி தென்மேற்கு, மத்திய, மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version