தமிழ்நாடு

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published

on

நீலகிரி மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருவதால் கூடலூர், குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்யத்தொடங்கிய கனமழை விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்வதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூர், கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், அங்கு இரும்பு பாலம் என்ற இடத்தில் உள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியல் உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version