தமிழ்நாடு

நாகையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது: மக்கள் அவதி!

Published

on

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதில் நாகை மாவட்டம் முழுவதும் சின்னாபின்னமாகி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் அங்குள்ள மக்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு மீண்டும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கஜா புயல் கரையை கடந்த பின்னர் தற்போது காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பொறையூர், காளியப்பநல்லூர், ஆக்கூர், திருக்கடையூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

அதே போல திண்டிவன, மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், திருவாரூர் மன்னார்குடியில் கோட்டூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version