தமிழ்நாடு

அடுத்த 3 மணி கனமழை மற்றும் சூறைக்காற்று: சென்னை வானிலை ஆய்வு மையம்

Published

on

அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறைக் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

130 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மார்ச் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது என நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் அதேபோல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version