உலகம்

சீனாவில் கொட்டித்தீர்த்த மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. (வீடியோ)

Published

on

சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும், ஹெனான் என்கிற மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், சீனாவில் செங்சாவ் பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 200 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக அங்கு இதுவரை 12 பேர் பலியாகிவிட்டனர். எனவே, அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த மழை எதிர்பார்த்திராத ஒன்று வானிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வால் இப்படி அதீத மழை பெய்யும். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணம் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version