தமிழ்நாடு

சென்னையில் விடியவிடிய கொட்டிய கனமழை: எந்தெந்த பகுதிகளில் எத்தனை மிமீ!

Published

on

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை நீரால் மிதந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது என்பதும், இன்று அதிகாலையிலும் தொடர்ந்து பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள எந்தெந்த பகுதிகளில் எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.

எம்ஆர்சி நகர் 82
தரமணி 75
பெருங்குடி 73
அண்ணாநகர் மேற்கு 73
நந்தனம் 66
ஷெனாய் நகர் 64
அண்ணா பல்கலைக்கழகம் 55
மேற்கு தாம்பரம் 48
வில்லிவாக்கம் 47
நுங்கம்பாக்கம் 43
மடிப்பாக்கம் 43
காஞ்சிபுரம் 38
மீனம்பாக்கம் 32
ஆலந்தூர் 30
மாதவரம் 21

மேலும் ஆரணி திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் 86 மில்லிமீட்டர், ராணிப்பேட்டையில் 38 மில்லிமீட்டர், கிருஷ்ணகிரியில் 31 மில்லிமீட்டர், செங்கல்பட்டில் 30 மில்லி மீட்டர், தர்மபுரியில் 23 மில்லி மீட்டர் மற்றும் விழுப்புரம் வேலூர் பகுதிகளில் 23 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version