தமிழ்நாடு

சென்னைக்கு அதிகனமழை வாய்ப்பு: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை தெற்கு கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்பு கூறியது போல் நவம்பர் 9ஆம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் இதைத் தொடர்ந்து வலுப்பெற்று வடக்கு கடற்கரை நோக்கி நகரும் இதன் காரணமாக 10 11 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை ஒரிரு இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த சில மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் கடந்த 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு உற்பத்தி 33 சென்டிமீட்டர். இந்த காலத்தின் இயல்பாக 22செமீ மழை பெய்யும். இந்த ஆண்டு மழையின் அளவு 43% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதால் சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version