தமிழ்நாடு

சென்னைக்கு மிக கனமழை.. 2015 வெள்ளம் மீண்டுமா?

Published

on

சென்னையில் வரும் 9 ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி தற்போது வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக சென்னை புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புயல் சென்னை மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னைக்கு மிக மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainமேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஒருசில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிக கனமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பேரிடர் படையை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்து சில நாட்களுக்கு சென்னை மக்கள் ஒரு கடினமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version