தமிழ்நாடு

ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Published

on

இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கனமழை மற்றும் ஏரிகள் உபரி நீர் திறப்பு காரணமாக வெள்ளத்தில் சென்னையே தத்தளித்து வருகிறது என்பதும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்னும் ஒரு மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களுடைய இல்லங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trending

Exit mobile version