தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

Published

on

அடுத்த இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்டா மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 18ஆம் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version