தமிழ்நாடு

இன்றும் நாளையும் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை- முழு விவரம்

Published

on

தமிழகத்தில் இன்றும் நாளையும் எந்தெந்த இடங்களில் எல்லாம் கன மழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னுலடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version