உலகம்

துருக்கியில் அதிபயங்கர நிலநடுக்கம்: 300-ஐ தாண்டிய உயிரிழப்பு

Published

on

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. மேலும் 600 க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#image_title

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 நிமிடங்கள் இடைவெளியில் 6.7 ரிக்டர் அளவில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. இதில் சிரியாவில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்த நிலையில் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 600 க்கு மேற்பட்டோர் சிகிச்சையும் பெற்று வருகிறது.

மீட்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன் என துருக்கி அதிபர் கூறியுள்ளார். மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ் நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version