இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

Published

on

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து பொதுவெளியில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் எந்தவித சேதமும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version