இந்தியா

இமாச்சல பிரதேச முதல்வர் பதவி போட்டியில் 4 பேர்.. கிடைத்த ஆட்சியை இழக்குமா காங்கிரஸ்?

Published

on

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று விட்ட நிலையில் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆட்சி அமைக்க இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பது யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்பதுதான்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தலை சந்திப்பதில் காட்டிய ஒற்றுமையை தற்போது முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இல்லை என்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சல பிரதேசத்தில் பிரதிபா சிங், சுதிர் ஷர்மா, முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகிய நான்கு முக்கிய பிரபலங்கள் முதல்வர் பதவியை குறிவைத்து உள்ளதாகவும் அதற்காக எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் பதவி கிடைக்காத யாராவது ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதனை பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே தேர்தலை சந்திப்பதில் காட்டிய ஒற்றுமையை முதலமைச்சர் தேர்விலும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் காட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version