இந்தியா

பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Published

on

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

வெப்ப அலை

நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர்த்து, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் உள்ள பல பகுதிகளில் இயல்பை விடவும் அதிகபட்சமான வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, கடலோர ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடவும் 3 முதல் 5 புள்ளிகள் அதிகமாக இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version