உலகம்

30 நிமிடங்கள் விமானத்தில் தொடர்ந்து அழுத குழந்தை.. 3 பெண்கள் செய்த மாயாஜாலம்..!

Published

on

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் ஒரு குழந்தையை வளர்க்க குறைந்த பட்சம் ஒரு குடும்பமே தேவைப்படும் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போது சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தையை வளர்க்க திணறி வருகிறார்கள் என்றும் குறிப்பாக குழந்தை அழுகத் தொடங்கினால் அந்த அழுகையை எப்படி நிறுத்துவது என்பதை தெரியாமல் திணறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல் முறையாக குழந்தையை விமான பயணத்திற்கு அழைத்துச் சென்ற தாய் ஒருவர் பட்ட சிக்கலும் அவருக்கு மூன்று வயதான பெண்கள் உதவிய நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்யபோது விமானத்தில் உள்ளே நுழைந்ததுமே அந்த குழந்தை அழுகத் தொடங்கியது. ஒரு வழியாக தனது இருக்கையை கண்டுபிடித்து அந்த பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்த போது குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

பல்வேறு விதமாக அவர் குழந்தையின் அழுகையை நிறுத்த சமாதானப்படுத்த போதிலும் குழந்தை சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து அழுதது. இதனால் குழந்தையின் அம்மாவுக்கு மட்டும் இன்றி அருகில் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கும் அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கும் பெரும் தொந்தரவாக இருந்தது.

இந்த நேரத்தில் தான் மூன்று வயதான பெண்கள் தேவதைகள் போல் வந்து குழந்தையின் அம்மாவுக்கு உதவி செய்தனர். குழந்தை வைத்திருந்த பெண்ணின் எதிரே உட்கார்ந்திருந்த அந்த மூன்று பெண்கள் குழந்தையை கையில் வாங்கி சிரித்தபடி மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே குழந்தையுடன் பேச தொடங்கினார்கள். இங்குதான் ஆச்சரியம் நடந்தது. குழந்தை உடனே அழுகையை நிறுத்தி அந்த மூன்று பெண்களையும் மாறி மாறி பார்த்தது. மூன்று பெண்களும் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் அந்த குழந்தையுடன் முணுமுணுத்தபடி இருந்ததை அடுத்து குழந்தை முற்றிலும் அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு தான் அம்மா நிம்மதி அடைந்தார்.

குழந்தையின் அழுகையை நிறுத்திய அந்த பெண் 40 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. அந்த பெண்களின் கருணை பலரால் பாராட்டப்பட்டது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலான போது ஏராளமான ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நிச்சயமாக ஒரு வீட்டில் பெரியவர் ஒருவர் தேவை என்றும் தற்போது பெரியவர்களை நாம் ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனம் செல்கிறோம் என்றும் குழந்தை வளர்ப்பிற்கு நமது பெரியோர்களின் அன்பும் அரவணைப்பும் நிச்சயம் தேவை என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version