சினிமா செய்திகள்
அயோக்யா ட்ரெய்லர் தாறுமாறு.. மனசார பாராட்டிய விஜய்சேதுபதி!
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் அட்டகாசமான ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதித்துறையில் உடனடி தண்டனை இல்லாததை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், எம்.எஸ். பாஸ்கர், கே.எஸ். ரவிக்குமார் என ஒவ்வொரு ஷார்ட்டும் பக்காவாக இருக்கிறது.
இரும்புத்திரை படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது விஷாலுக்கு என ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ட்ரெய்லரை வெளியிடும்போதே ட்விட்டரில் விஜய்சேதுபதி, ட்ரெய்லர் தாறுமாறு என பாராட்டித் தான் வெளியிட்டார்.