ஆரோக்கியம்

வீட்டு வைத்தியம்.. இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே?

Published

on

நாம் தினம் சாப்பிடும் உணவில் பல்வேறு நன்மைகள் இருக்கும். ஆனால் அதைத் தெரியாமல் அவற்றை நாம் அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ளாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். எனவே உடல் நலத்தை பேணிக்காக்கும் சில உணவுகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நார்ச்சத்துகள்:

நார்ச்சத்துகள் உள்ள உணவுகளை உடல் சீக்கிரம் ஜீரணிக்கிறது. நார்ச்சத்திலும் கூட நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து உணவுகளை அதிகமாகவும், நீரில் கரையாத நார்ச்சத்து உணவுகளைக் குறைவாகவும் உடலானது எடுத்துக்கொள்கிறது. நார்ச்சத்து அதிகம் உட்கொண்டால் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் வராது. மேலும், இவ்வகை உணவு சிறந்த டயட் ப்ளானாகவும் இருக்கிறது.

சீரகம்:

உணவுகளில் சீரகம் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்க கூடியது. மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருப்பதுடன், குடலில் ஜீரணிக்காத நச்சுக்களை நீக்கி செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்கிறது. சீரகத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர, சீரகத்தை வைட்டமின் சி உள்ளதால் தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும். ஆனால் இதை அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

புடலங்காய்:

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலும் நமது உடலில் குடல் புண்ணை ஆற்றுகிறது. பசியை தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். அஜீரண கோலாரை நீக்கும். மூல நோயை குணமாகும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும். புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கும்.

உணவுகள் ஜீரணமாகும் நேரம்:

ஒரு கிளாஸ் பால் ஜீரணமாக 4 முதல் 5 மணிநேரமாகும். பழச்சாறுகள் 20 முதல் 30 நிமிடங்களில் ஜீரணமாகும். பீட்ரூட ஜீரணமடைய 50 நிமிடங்களும், காலிஃபிளவர் ஜீரணமாக 50 நிமிடங்களும் ஆகும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும். உருளைக்கிழங்கு ஜீணைமாக 1 மணிநேரமும், பச்சையாகச் சாப்பிடும் கேரட் 50 நிமிடங்களும் ஆகும். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை ஜீரணமாக கிட்டத்தட்ட 3 மணி நேரமாகும்.

கோவைக்காய்:

கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெறியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவற்றை உடலுக்கு பெறவும் கோவைக்காயை அதிகம் உண்ணவும்.

துளசி:

துளசி சாப்பிடுவதால் சளி, ஜீரணத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

அஜீரணம்:

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

Trending

Exit mobile version